உக்ரைன் போர் நிறுத்தம் எப்போது: புடின் உடன் போனில் பேசினார் டிரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரி்க்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் போனில் பேச்சு நடத்தினர்.
அமெரிக்க அதிபராக பைடன் இருந்தவரை, ரஷ்யா உடன் எந்த உறவும் இல்லாத நிலை இருந்தது. அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமான நிலையை எட்டி இருந்தது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பதவிக்கு வந்த அதிபர் டிரம்ப், முந்தைய அதிபரின் கொள்கைகளை கைவிட்டு, ரஷ்யா உடன் பேச்சு நடத்த தொடங்கிவிட்டார்.
பதவியேற்ற நாள் முதலே உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவேன் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
அதன்படி ஏற்கனவே ஒரு முறை ரஷ்ய அதிபர் புடின் உடன் போனில் பேசி இருந்தார்.
இன்று இரண்டாம் முறையாக இரு நாட்டு அதிபர்களும் போனில் பேச்சு நடத்தினர்.
கடந்த வாரம், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஒப்புக்கொண்டனர்.
இது பற்றி ரஷ்ய அதிபருடன் டிரம்ப் பேசி போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வார் என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேச்சு வார்த்தை குறித்து, இரு நாட்டு அரசுகள் தரப்பிலும் விரிவான அறிக்கைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும்
-
தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடு, மாடு, கோழிக்கு அரசு இழப்பீடு சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
-
ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு 6 மாதம் சிறை; ரூ.80 லட்சம் அபராதம் 4 பேர் விடுதலை
-
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் வழக்கு
-
ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
சாலை வளைவுகளில் கட்டுப்பாடு தேவை