ரூ.1 கோடி கஞ்சா சத்தீஸ்கரில் பறிமுதல்

கோர்பா : ஒடிசாவில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு, சத்தீஸ்கர் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தின் கட்கோரா பகுதி யையொட்டி உள்ள பிலாஸ்பூர் - அம்பிகாபர் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற லாரியை பிடித்து, போலீசார் சோதனையிட்டனர்.

இதில், 500 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 1 கோடி ரூபாய் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, டில்லியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராகுல் குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement