விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மணி, உதவி தலைமையாசிரியர் கோவிந்தன், பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, ஸ்ரீராம், சாமிதுரை, தியாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார்.

சி.இ.ஓ., கார்த்திகா மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கோஷங்கள் எழுப்பி காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு, மந்தைவெளி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல், சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement