கோவிலுக்கு துப்பாக்கியுடன் வந்த பெண் கைது

ஜம்மு : டில்லியைச் சேர்ந்தவர் ஜோதி குப்தா. ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிளான இவர், ஜம்மு - காஷ்மீரின் ரேசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி மலைக்கோவிலுக்கு தரிசனத்துக்காக சமீபத்தில் வந்தார்.
அப்போது, அக்கோவில் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.
இதில், அவரது பையில் கைத்துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கியில் ஆறு குண்டுகள் இருந்தன.
பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக, ஜோதி குப்தா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது துப்பாக்கிக்கான உரிமமும் காலாவதியானது கண்டறியப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை
-
காட்டுப்பன்றி, மயில் பிரச்னைக்கு மத்திய அரசின் கையில் தான் தீர்வு உள்ளது: அமைச்சர்கள் கருத்து
-
குறைதீர் முகாமில் 26 பேரிடம் மனு
-
'கிரேட்டர் பெங்களூரு'க்கு எதிர்ப்பு; கவர்னரிடம் பா.ஜ., தலைவர்கள் மனு
-
சென்னையில் முதல் 'ஏசி' மின்சார ரயில் உத்தேச கால அட்டவணை வெளியீடு
-
நெல் கொள்முதல் நிலையம் களக்காட்டூரில் திறப்பு
Advertisement
Advertisement