விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை
திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கான அனைத்து கட்சி கூட்டம், நேற்று முன்தினம், திருவொற்றியூர் மண்டல கூட்டரங்கில், மண்டல அலுவலர் விஜய் பாபு தலைமையில் நடந்தது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கே.குப்பன், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலர், அ.தி.மு.க.,
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மூன்று லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் இருந்தன. லோக்சபா தேர்தலில், 2.74 லட்சமாக குறைந்தது. அதன்படி, 34,000 க்கும் அதிகமான ஓட்டுகள் குறைந்துள்ளன. வீடு வீடாக சென்று, அந்த ஓட்டுகளை கணக்கெடுத்து சேர்க்கவேண்டும்.
தி.மு.தனியரசு, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலர், தி.மு.க.,
வாக்காளர் பட்டியிலில், இறந்தவர்கள் பதிவு நீக்கப்படவில்லை. தேர்தல் பணியாளர்கள், விருப்பமே இல்லாமல் பணியாற்றுவது போல் தெரிகிறது. ஓட்டுகள் விடுபட்டுள்ளன. தி.மு.க.,வைச் சேர்த்த, பல ஆயிரம் ஓட்டுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
ஆர்.கோகுல், மண்டல செயலர், நாம் தமிழர்
சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தவர்கள், லோக்சபா தேர்லில் ஓட்டளிக்க முடியவில்லை. நிறைய ஓட்டுகள் விடுபட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் முறையாக, ஓட்டு சீட்டுகளை வினியோகம் செய்வதில்லை. விடுபட்ட 35,000க்கும் அதிகமான ஓட்டுகள் சேர்க்கப்பட வேண்டும்.
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது