ரூ.400 வழங்க வேண்டும்!

1

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கையை, 100ல் இருந்து, 150 ஆக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கி, குறைந்தபட்ச ஊதியமாக, 400 ரூபாய் வழங்க வேண்டும்.

- சோனியா

பார்லி., குழு தலைவர், காங்.,

பாகுபாடு இல்லை!



கேரளா அல்லது கர்நாடகா என, எந்த மாநில விவசாயிகளிடமும் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதுஇல்லை. நாம் அனைவரும் இந்திய நாட்டின் குடிமக்கள். விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

- சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய அமைச்சர், பா.ஜ.,


ஓட்டு வங்கி மீது ஆர்வம்!



கர்நாடகாவில், சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை காங்., அரசு மீறி உள்ளது. இது, சமூக அமைதியின்மையை உருவாக்கும் முயற்சி. சமூக நல்லிணக்கத்தை பேணுவதை விட ஓட்டு வங்கியை வலுப்படுத்துவதில், காங்., அக்கறை கொண்டுள்ளது.

- பசவராஜ் பொம்மை

கர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement