'அமைதியான நாட்டை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது'

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ்., குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூரில் நேற்று அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேகர் அளித்த பேட்டி:
பெங்களூரு சென்னனஹள்ளி ஜனசேவா வித்யா கேந்திராவில் மார்ச் 21 முதல் 23 வரை ஆர்.எஸ்.எஸ்., அனைத்திந்திய பிரதிநிதிகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தத்தாத்ரேயா ஹொசபெலே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில், 2024 - 25ன் அறிக்கையை, தத்தாத்ரேயா ஹொசபெலே தாக்கல் செய்கிறார்.
கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., கொள்கை குறித்து விவாதிக்கப்படும். அமைப்பின் செயல்பாடுகள், வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்., குறித்து முதல்வர் சித்தராமையா என்ன பேசினார் என்று தெரியவில்லை
ஆனால் எங்களின் அமைப்பு துவங்கிய நாள் முதலே, அமைதியான நாட்டை உருவாக்கவே முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது