தி.மு.க., அரசு மீது அவதுாறு பரப்பும் எண்ணம் ஈடேறாது: செந்தில் பாலாஜி
சென்னை:சட்டசபையில் பா.ஜ., வானதி, ''டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்து, இப்போது படிப்படியாக மது விற்பனைக்கு அனுமதி அளிக்கிறீர்களே?'' என கேட்டதற்கு, ''தி.மு.க., அரசின் கடந்த நான்காண்டு கால சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
''அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என, ஒரு அரசியல் கட்சி பூதக்கண்ணாடி போட்டு தேடிப் பார்த்தது; ஒன்றும் கிடைக்கவில்லை. சாட்டையால்கூட அடித்துக் கொண்டனர்.
''கடைசியாக அமலாக்கத் துறையை கொண்டு, அந்த துறைக்கே சம்பந்தம் இல்லாதவர் இடங்களில் எல்லாம் சோதனை மேற்கொண்டனர்.
''தி.மு.க., அரசு மீது, அவதுாறு பரப்ப வேண்டும்; மக்களிடம் தீய கருத்தை பரப்ப வேண்டும் என்ற அவர்களின் குறுகிய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவர்கள் சொல்லும் கணக்கு மனக் கணக்கு.
''கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் தி.மு.க., அளிக்கவில்லை. ஆனாலும், மக்கள் நலன் கருதி, 603 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது