டொயோட்டா கிளான்ஸா செம மைலேஜ், நம்பகமான இன்ஜின்

'கிளான்ஸா' கார், 'டொயோட்டா' நிறுவனத்தின் நான்கு மீட்டர் ஹேட்ச்பேக் கார் ஆகும். முதன்முதலில் 2019ல் அறிமுகமானது. தற்போது, இரண்டாம் தலைமுறையில் உள்ள இந்த கார், பெட்ரோல், சி.என்.ஜி., வகையிலும், மேனுவல், ஏ.ம்.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் வகையிலும் வருகிறது. டிசைன், தொழில்நுட்பம், ஓட்டும் அனுபவம் ஆகிய அனைத்திலும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காரில், 1.2 லிட்டர், 4 சிலிண்டர், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின் வழங்கப்படுகிறது. பெட்ரோலில், 23 கி.மீ.,ரும், சி.என்.ஜி.,க்கு 30.61 கி.மீ.,ரும் மைலேஜ் தருகிறது.
ஆனால், சி.என்.ஜி. வகை, 'எஸ்' மற்றும் 'ஜி' மாடல் கார்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பூட் ஸ்பேஸ், 318 லிட்டரும், கிரவுண்ட் கிளியரன்ஸ், 170 எம்.எம்., ஆகவும் உள்ளது.
அம்சங்களை பொறுத்த வரை, 9 அங்குல டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, பின்புற 'ஏ.சி.,' வெண்ட்கள், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், சாவி இல்லாமல் கதவை திறக்கும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன. பாதுகாப்புக்கு, 6 காற்று பைகள், ஏ.பி.எஸ்., ஹில் ஹோல்டு அசிஸ்ட், பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
இன்ஜின் - 1.2 லிட்டர், 4 சிலிண்டர், கே சீரிஸ் இன்ஜின்
பவர் - 89 ஹெச்.பி.,
டார்க் - 113 என்.எம்.,
மைலேஜ் - 23 கி.மீ., (30 கி.மீ., சி.என்.ஜி.,)
பூட் ஸ்பேஸ் - 318 லிட்டர்