துபாயில் இருந்து கடத்திய ரூ.1.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை, துபாயில் இருந்து சென்னைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகாலை 2:00 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். அவர் வைத்திருந்த உடைமைகளை சோதித்தபோது எதுவும் சிக்கவில்லை. அவர் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார். பாட்டிலை திறந்து பார்த்ததில் தங்க பசைகள் கடத்தியது தெரியவந்தது. அதன் எடை 1.5 கிலோ. சர்வதேச மதிப்பு 1.23 கோடி ரூபாய் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

***

Advertisement