பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அயனாவரம், அயனாவரம், சோலை அம்மன் கோவில் தெருவில் உள்ள, விளையாட்டு மைதானம் அருகில், மாற்றுத்திறனாளி சிறுவன் வழித்தவறி சுற்றுவதாக, நேற்று முன்தினம் மாலை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிறுவனை மீட்ட அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சிறுவன் அணிந்திருந்த சீருடையை வைத்து, வேப்பேரி தனியார் பள்ளியில் படிப்பதையும், அயனாவரம் பகுதியில் பெற்றோருடன் வசிப்பதையும் கண்டறிந்தார்.

பின், அயனாவரம், சண்முகம் தெருவில் வசிக்கும் பிரதீப் துலி - தீப்ஷிகா துலி தம்பதியை அழைத்து, 11 வயது சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.

சிறுவனை மீட்பதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஸ்கேட்டிங் பயிற்சிக்காக தாயுடன் ஆட்டோவில் செல்லும்போது, அதில் இருந்து குதித்து சிறுவன் தப்பியோடியபோது, வழிமாறி சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

Advertisement