வள்ளுவர்கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை

சென்னை, சென்னையில், அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் உள்ளிட்டோர், தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர்.

அதற்காக, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயும், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாராயணப்பன் தெரு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே என, 27 இடங்கள் ஒதுக்கி உள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில், போக்குவரத்திற்கு இடையூறின்றி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த, அனுமதி அளித்து வருகின்றனர்.

தற்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளத.

அந்த இடத்திற்கு மாற்றாக, திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லையில் சுவாமி சிவானந்தா சாலையை ஒதுக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement