படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்

ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது.
ஷிவ்புரி மாவட்டம் ஹனியாதானா போலீஸ் எல்லைக்குட்பட்ட மட்டதில்லா அணைப் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை (மார்ச் 18) 15 பேருடன் படகு ஒன்று சென்றுள்ளது.
இந்த நிலையில், படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேரை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.
இதில், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் கன்ஹா,7, ஷிவா,8, சாய்னா,14, ராம்தேவி,35, லீலா,40, ஷர்தா,55 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கும்கும் எனும் 15 வயது சிறுமியின் உடல் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ராம்தேவி கூறுகையில், " படகில் திடீரென தண்ணீர் புகுந்தது. இதனால், ஒரு பக்கமாக படகு கவிந்தது. எனக்கு நீச்சல் தெரியாத போதும், கைகளை தண்ணீரில் அடித்து தத்தளித்து கொண்டிருந்தேன். அப்போது, சரியான சமயத்திற்கு மீட்பு படகு வந்ததால், உயிர்தப்பினேன்", எனக் கூறினார்.
மேலும்
-
வன்முறைகள் குறித்து துளசி கருத்து: வங்கதேசத்தின் விமர்சனமும், அமெரிக்கா பதிலும்!
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: தெலுங்கானாவில் பிரபல நடிகர்கள் மீது பாய்ந்தது வழக்கு
-
மும்பையில் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.20 கோடி இழந்த மூதாட்டி
-
மத்திய அமைச்சரின் உறவினர் சுட்டுக்கொலை; பீஹாரில் அதிர்ச்சி
-
வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு
-
எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!