குறைதீர்வு கூட்டம்

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று, பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

நேற்று நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த மனுக்கள் மீது முறையான தீர்வு கிடைக்க பெறாதவர்கள், நடவடிக்கையில் திருப்தி இல்லாதவர்கள் நேற்று மனு அளித்தனர். மொத்தம், 34 பேர் மனு அளித்த நிலையில், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement