ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிய முதல்வர் சித்து மீது புகார்

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரத்தை உருவாக்குகின்றனர் என்று பேசிய, முதல்வர் சித்தராமையா மீது, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், கடந்த 17ம் தேதி முதல்வர் சித்தராமையா சட்டசபையில் பேசுகையில், 'மாநிலத்தில் குற்ற விகிதத்தை குறைப்பது எங்கள் நோக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள், இந்த சமூகத்தில் கலவரத்தை உருவாக்குகின்றனர். வெறுப்பு பேச்சு பேசுகின்றனர்' என்று கூறினார். முதல்வர் பேச்சுக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிய முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடும்படி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் கிரண் என்பவர் நேற்று புகார் அளித்து உள்ளார்.

Advertisement