'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம் பெண்கள் பயன்பெற அழைப்பு
சென்னை, 'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள், ஏப்., 6க்குள் விண்ணப்பிக்கலாம்.
சமூக நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
சுய தொழிலில் பெண்கள் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், 'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த 8ம் தேதி, சென்னையில் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக 250 பெண்களுக்கு, சி.என்.ஜி., ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக திட்டத்தில் பயன் பெற, சென்னையில் வசிக்கும், ஓட்டுநர் உரிமம் பெற்ற, 20 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, 'சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600 001' என்ற, முகவரிக்கு, அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது