மகள்கள் திருமணத்தால் விரக்தி தாய் துாக்கிட்டு தற்கொலை

புழல், புழல் அடுத்த கதிர்வேடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராம். தையல்காரரான இவர், மனைவி நரசம்மா, 42, மற்றும் மகள்களுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர்களது மகள்கள் இருவர், அவர்கள் விருப்பம் போல் திருமணம் செய்து கொண்டதால், நரசம்மா விரக்தியில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு துாங்க சென்றார். அதிகாலையில் ஜெயராம், மனைவியை தேடிய போது, வீட்டின் மேல் அறையில், மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மகள்களின் திருமணத்தால் விரக்தியில் நரசம்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement