வழிவிடுவதில் இருதரப்பு தகராறு வாலிபரை வெட்டியோர் கைது

அம்பத்துார்,அம்பத்துார், ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய், 25; ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தவர்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 24, ஐ.சி.எப்.,பைச் சேர்ந்த ஜீவா, 24, ஆகியோருடன் மது அருந்திவிட்டு, கடந்த 16ம் தேதி நள்ளிரவு பைக்கில் சென்றுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 32, தனது நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். ஒரகடம் அருகே வழிவிடுவதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், அஜய், தினேஷ், ஜீவா ஆகிய மூவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஸ்ரீதரின் இடது கையில் வெட்டி விட்டு தப்பினர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த அம்பத்துார் போலீசார், தலைமறைவாக இருந்த அஜய், தினேஷ், ஜீவா ஆகியோரை கைது செய்து,நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

Advertisement