ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை
பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், அவரது தந்தை கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்களில் அவதுாறு செய்தி வெளியாவதை தடுங்கள் என்று மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரது தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இதையடுத்து ரன்யா, ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்களில் அவதுாறு செய்தி வெளியாவதை தடுக்க உத்தரவிட கோரி, உயர்நீதிமன்றத்தில், ரன்யாவின் தாய் ரோகிணி மனு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவதுாறு செய்திகள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தங்கம் கடத்திய வழக்கில் கைதான ரன்யாவின் முன்னாள் காதலன் தருண், ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்து வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி விஸ்வநாத் கவுடர் நேற்று உத்தரவிட்டார்.
மேலும்
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு