முதல்வர் பிறந்தநாளையொட்டி சீர்ப்பனந்தலில் பொதுக்கூட்டம்

ரிஷிவந்தியம்: சீர்ப்பனந்தல் கிராமத்தில் தி.மு.க., சார்பில் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது.

வாணாபுரம் அடுத்த சீர்ப்பனந்தலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அமிர்தம் ராஜேந்திரன், அவைத்தலைவர் துரை பாலகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, கிளை செயலாளர்கள் பழனி, பஞ்சாமிர்தம், சம்பத் முன்னிலை வகித்தனர். ரவி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா பங்கேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பெண்கள் நலனுக்காக செய்த திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், கிருஷ்ணமூர்த்தி, துளசிங்கம், குபேந்திரன், ஏழுமலை, செல்விரேணு, தண்டபாணி, மூர்த்தி, பரிமளா உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர். ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement