ஆம்பாக்கத்தில் குறுகிய சாலை அகலப்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசியில் இருந்து, உள்ளாவூர் ரயில்வே கேட் வரையிலான 9 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது. உள்ளாவூர், வரதாபுரம், தொள்ளாழி, தோண்டாங்குளம், மதுராப்பாக்கம், ஆம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இச்சாலை வழியை பயன்படுத்த பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு இச்சாலை வழியாக வேன் மற்றும் ஏராளமான கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், இக்கிராமங்கள், விவசாயம் நிறைந்த பகுதிகளாக உள்ளதால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கான வாகனங்களும் இச்சாலை வழியாக இயங்குகின்றன.
இச்சாலையில் தொள்ளாழி முதல், வாரணவாசி வரையிலான சாலை மிகவும் குறுகியதாக காணப்படுகிறது. இதனால், இச்சாலையில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இதுகுறித்து, தொள்ளாழி கிராமத்தினர் கூறியதாவது:
குறுகியதான இச்சாலையை அகலப்படுத்தக்கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இச்சாலை குறுகியதாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
தொள்ளாழி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் சமயங்களில், நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் பாதிப்பிற்குள்ளாகின்றன.
எனவே, வாரணவாசியில் இருந்து, உள்ளாவூர் கேட் வரையிலான சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
-
நகை விற்பனை ரசீதில் எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வழக்கு