சித்தோடு வாரச்சந்தையில்35 தராசு, படிகற்கள் பறிமுதல்



சித்தோடு வாரச்சந்தையில்35 தராசு, படிகற்கள் பறிமுதல்


ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் சித்தோடு வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு, பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.
மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகள்-19, மேசை தராசு-1, எடை கற்கள்-10, படிகள், அளவைகள்-5 என, 35 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தினால் சட்டப்படி அபராதம், பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வியாபாரிகளுக்கு
அறிவுரை வழங்கினர்.

Advertisement