மனைவி எரித்துக் கொலை ராணுவ வீரருக்கு ஆயுள்

சிவகங்கை:சிவகங்கை அருகே மனைவியை தீவைத்து கொலை செய்த ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழவளையம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 31. ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கும் தேவகோட்டையை சேர்ந்த எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீவித்யா 27 என்பவருக்கும் 2014ல் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. செல்வக்குமார் வீடு கட்டுவதற்காக ஸ்ரீவித்யா பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி தகராறு செய்துள்ளார்.

2017 டிச.8ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவித்யா அணிந்திருந்த உடையில் செல்வக்குமார் தீ வைத்துள்ளார். இதில் காயமடைந்த ஸ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காளையார்கோவில் போலீசார் செல்வக்குமார் 31, அவரது தந்தை வேலுச்சாமி 58, தாயார் வள்ளி 52, அக்கா கோகிலா 30, உறவினர் சுதா 33 ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது வேலுச்சாமி இறந்தார். செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும், வள்ளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும், கோகிலாவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும், சுதாவை விடுதலை செய்தும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்ததற்காக ஸ்ரீவித்யாவின் தந்தை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Advertisement