பெரிய மாரியம்மன் கோவில் விழாவால்அன்னதான திட்டம் தற்காலிக இடமாற்றம்

பெரிய மாரியம்மன் கோவில் விழாவால்அன்னதான திட்டம் தற்காலிக இடமாற்றம்


ஈரோடு:ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது.
இக்கோவிலில், தினமும் மதியம் அன்னதான திட்டத்தின் கீழ் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பெரிய மாரியம்மன் கோவில் விசேஷம் துவங்கி இருப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். எனவே இங்கு அன்னதானம் போட இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றம் செய்யப்பட்டு, நேற்று முதல் அங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏப்.,6 வரை அன்னதான திட்டத்துக்காக சமையல் செய்து பக்தர்கள், பொதுமக்களுக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படும். ஏப்.,6க்கு பின் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் குறைந்த பின் மீண்டும் அன்னதான திட்டம் தொடரும் என, கோவில்
நிர்வாகிகள் தெரிவித்தனர்

Advertisement