ஜி.டி.என். , கல்லூரியில் விளையாட்டு விழா

திண்டுக்கல், : திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் 61 வது ஆண்டு விளையாட்டு விழாவானது கொண்டாடப்பட்டது.

கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் ஜி.டி.என். கல்விக்குழும மாணவர்களின் அணிவகுப்பு மரியாதைக்குப்பிறகு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது .

விளையாட்டு விழாவினை இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை உடற்கல்வி இயக்குநர்பேசினார்.

Advertisement