புதுச்சேரியில் உலா வரும் வாழைப்பழ திருடர்கள் சி.சி.டி.வி., காட்சிகள் வைரல் 

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையோர தள்ளுவண்டி கடையில் வாழைப்பழம் திருடிச் செல்லும் திருடர்கள் குறித்த சி.சி.டி.வி., காட்சிகள் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி, அண்ணா சாலை ராஜா தியோட்டர் அருகே தள்ளு வண்டியில் வாழைப்பழம் வியாபாரம் செய்பவர் ராஜாமணி.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வாழைப்பழம் வியாபாரம் செய்தார். இரவு 11:30 மணிக்கு, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், மின்னல் வேகத்தில் தள்ளு வண்டியில் வைத்திருந்த 2 சீப்பு வாழைப்பழத்தை திருடிக் கொண்டு வேகமாக சென்றனர். இது அனைத்தும் அப்பகுதியில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகி உள்ளது.

வாழைப்பழம் திருடும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement