எம்.எல்.ஏ., பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய ராமலிங்கம் எம்.எல்.ஏ.,விற்கு முதல்வர் ரங்கசாமி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ., ராமலிங்கம் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அதையொட்டி, சாய்பாபா திருமண மண்டபத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், எல்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், வெங்கடேசன், ஜான்குமார், சப்தகிரி குழும இயக்குனர் ரமேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, வாழைக்குளம் செங்கேணி அம்மன் கோவிலில் நடந்த, பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.
ராஜ்பவன் தொகுதியில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடி, முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், 30 பேருக்கு சொந்த செலவில், காப்பீடு திட்டத்திற்கான தொகையை செலுத்தினார்.
விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள், பெண்களுக்கு தையல் இயந்திரம், தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்
-
இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு நிதியுதவி
-
ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்
-
அதிகரிக்கும் வெப்பத்தால் வேகமாக வற்றும் நீர்நிலைகள்; ஏரிகளை துார்வார அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
-
உணவு பாதுகாப்பு துறையினர் ஒகேனக்கல் கடைகளில் சோதனை
-
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
-
தண்ணீர் பந்தல் திறப்பு