சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை,: உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கல்லுாரி மாணவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக் குமார், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கைகளில் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement