கல்லுாரிகள் 'டி-20' கிரிக்கெட் ராமகிருஷ்ணா வீரர் அசத்தல்

கோவை,: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே சி.எஸ்.கே.,- 'டி20' கிரிக்கெட் போட்டி கடந்த, 17ம் தேதி முதல் நடக்கிறது; இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்றன.

பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., மைதானத்தில் நேற்று முன்தினம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 173 ரன்கள் எடுத்தது.

கிருஷ்ணா கல்லுாரி அணி, 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 22 ரன்கள் எடுத்தது.

ராமகிருஷ்ணா அணி வீரர் பிரனேஷ் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். ரிகான் அலி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.

Advertisement