சிட்டி கிரைம்
போதையில் தகராறு மூவர் கைது
வடவள்ளி, நியூ தில்லை நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜா, 28; இவர் கடந்த 18ம் தேதி மாலை தனது நண்பர்களான இசக்கிமுத்து, 38, ரஞ்சித், 26, மணிகண்டன், 30 ஆகியோருடன் மது அருந்த சென்றார். மது போதையில் டேவிட் ராஜா மற்றும் இசக்கி முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இசக்கிமுத்து, ரஞ்சித் மற்றும் மணிகண்டன் ஆகியோர் டேவிட் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த மூவரும் அங்கிருந்து ஓடினர். டேவிட் ராஜா அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து, இசக்கிமுத்து, ரஞ்சித், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசுடன் வாக்குவாதம்
சிங்காநல்லுாரில் லாரி டிரைவர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாரி டிரைவரிடம் கேட்டபோது, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில், மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மது போதையில் வாகனம் ஓட்டுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் டிரைவர் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு