கீர்த்திலால்ஸ் வைரங்களில் புதிய படைப்புகள் அறிமுகம்

கோவை: கீர்த்திலால்ஸ் வைர நகை ஷோரூமில், 'லஸ்டர் மற்றும் லெகஸி பை கீர்த்திலால்ஸ்' என்ற பெயரில் பிரத்யேக ஆறு வைர நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இயற்கையான வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களின் கலைத்திறனை கொண்டாடும் வகையில் தனித்துவமான கலெக் ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக ஆறு நகை அறிமுக விழாவில், கூடுதலாக 30 ஆயிரம் வைர நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நகைகள் மிகவும் நேரத்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாரம்பரியத்துடன், நவீனத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ளது.
நிகழ்ச்சியில் வைரங்களின் துாய்மை, உண்மைத்தன்மையை கண்டறியும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கே.எம்.சி.எச்., குழுமத்தின் துணைத்தலைவர் தவமணி பழனிசாமி, இயந்திர பயன்பாட்டை துவக்கிவைத்தார்.
வைர நகைகளை வாங்குவதில், அதன் உண்மைத்தன்மையை வெளிப்படையாக இந்த இயந்திரம் வாயிலாக பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
கீர்த்திலால்ஸ் பிசினஸ் பிரிவு இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் கூறுகையில், ''காலத்தால் அழியாத கைவினைத்திறன் மிக்க நகைகளை 'லஸ்டர் மற்றும் லெகஸி பை கீர்த்திலால்ஸ்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டைமண்ட் டிடக்சன் மிஷின் வாயிலாக இயற்கை வைரத்திற்கும் பிற வைரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை மக்கள் அறிந்துகொண்டு நம்பிக்கையுடன்வாங்கி செல்ல முடியும்,'' என்றார்.
மேலும்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு