தினமலர் செய்தி எதிரொலி கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கும் பணி துவக்கம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரைகள் பலவீனமாக இருந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வன்னிப்பாக்கம், மடியூர் கிராமங்களுக்கு இடையே ஆற்றின் இருபுறமும், 9 கி.மீ., நீளத்திற்கு, 9.10 கோடி ரூபாயில் கரைகளை பலப்படுத்தி, மண் சரிவை தடுக்க, 2மீ. உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது.

சரிவுகளில் சிமென்ட் கற்களும் பதிக்கப்பட்டன. இந்நிலையில் கரை சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் கான்கிரீட் சுவர்கள் உடைந்து, கற்கள் சரிந்து சேதமாயின.

தரமற்ற முறையில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், குறுகிய காலத்தில், சேதம் அடைந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கடந்த, 15ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறையினர் தற்போது அங்கு சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணிகளை துவங்கி உள்ளனர்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முழுமையாக மீண்டும் சீரமைக்க திட்டமிட்டு, உடைந்த கான்கிரீட் சுவர்கள், சரிந்த சிமென்ட் கற்கள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரத்தின் உதவிடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முறையாவது ஆற்றின் கரைகளை தரமாக அமைக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement