சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி

திருத்தணி:சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி, 35 பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர் குடும்பத்துடன் திருநின்றவூர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மெர்சி, திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை, 10:30 மணிக்கு எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் மெர்சி திருத்தணி சென்றார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே சென்னையில் இருந்து வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட மெர்சி தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை நேற்று மாலை இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement