17 வயது சிறுமியை கடத்தி திருமணம் 44 வயது டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 44 வயது டிரைவர் அழகு பாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முடுக்கன் குளத்தை சேர்ந்தவர் அழகு பாண்டி 44,, தனியார் பஸ் டிரைவர். 2023ல் பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தபோது ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தார்.

மல்லாங்கிணர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அழகு பாண்டியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அழகு பாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.

அழகு பாண்டிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். குடும்ப தகராறில் அந்த பெண்ணும், ஒரு குழந்தையும் தற்கொலை செய்தனர். இச்சம்பவத்திலும் அழகுபாண்டி மீது அலங்காநல்லூர் போலீசில் வழக்கு உள்ளது.

Advertisement