குதிரையேற்ற போட்டி: மாணவர்கள் அசத்தல்

பெங்களூரு: குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்டு மாணவ - மாணவியர் அசத்தினர்.

கே.ஆர்.ஏ., எனும் கர்நாடகா ரைடிங் அசோசியேஷன் இ.ஐ.ஆர்.எஸ்., எனும் எம்பசி இன்டர்நேஷனல் ரைடிங் ஸ்கூல் உடன் இணைந்து கர்நாடகா மாநில குதிரையேற்ற போட்டியை நடத்தியது.

இது, பெங்களூரு பாப்பனஹள்ளி பகுதியில் உள்ள இ.ஐ.ஆர்.எஸ்., வளாகத்தில் நடந்தது. இதில், சிப்பி மையம், பறக்கும் கடல், ராயல் அகாடமி, பெங்களூரு குதிரை சவாரி பள்ளி, ஹோஸ்ட் கிளப் போன்ற முன்னணி குதிரையேற்ற மையங்களில் இருந்து பல மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர்.

குதிரையேற்ற போட்டியில் ஒரு பிரிவான, குதிரையை ஓட்டியபடி வந்து உயரம் தாண்டுதல் போட்டியும் நடந்தது. தரையில் இருந்து 100 செ.மீ., உயரத்திற்கு தடை வைக்கப்பட்டிருந்தது.

இதை குதிரையின் ஜாக்கி, குதிரையை ஓட்டி கொண்டே வந்து தடையை தாண்ட வேண்டும். இந்த போட்டியில் பார்கவ், அஸ்காட்டில் ஹிபா, பசவராஜு ஆகிய மூவர், முதல் ௩ இடத்தை பிடித்து அசத்தினர். இந்நிகழ்ச்சி மூலம் குதிரையேற்ற விளையாட்டு, கர்நாடகாவில் வளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

Advertisement