ரூ.35 லட்சத்தில் தந்தைக்கு கார் பரிசளித்த ஆர்.சி.பி., வீராங்கனை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில், கர்நாடகாவை சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, வனிதா என பலர் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பட்டியலில், மேலும் ஒருவர் இடம் பெற்றுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல், 22. கடந்தாண்டு ஐ.பி.எல்., போட்டியில் பெண்கள் கிரிக்கெட்டில், ஆர்.சி.பி., அணி பட்டத்தை வென்றது. இந்த பட்டம் வெல்வதற்கு ஷ்ரேயங்கா பாட்டீலும் முக்கியமானவர்.
சமீபத்தில் தனது தந்தைக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா இனோவா கிரிஸ்டா காரை, பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி:
என் கிரிக்கெட்டுக்காக என் தந்தை பல தியாகங்கள் செய்துள்ளார். அவரின் தியாகத்தால் தான், நான் இன்று இங்கு இருக்கிறேன். அவருக்கு என்னால் முடிந்த சிறிய பரிசு கொடுக்க நினைத்தேன்.
பல நாட்களாக, கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல, கார் வாங்கிக் கொள்ளுமாறு, என் தந்தை அடிக்கடி கூறி வந்தார். ஆனால், என்னை விட, அவருக்கு கார் பரிசளிப்பது தான் முக்கியம் என்பதை தீர்மானித்தேன்.
எனவே அவரின் பிறந்த நாளில் ஆர்.சி.பி., அணியின் மற்ற விளையாட்டு வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமினி உட்பட பலர் என் வீட்டுக்கு வந்தனர். இவர்கள், எங்கள் வீட்டுக்கு வந்ததை என் தந்தையால் நம்ப முடியவில்லை.
என் தந்தையிடம் காரின் சாவியை கொடுத்தேன். ஆச்சரியப்பட்டவர், உனக்கா என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், இல்லை உங்களுக்கு என்றேன். என் தந்தை கண் கலங்கினார். அன்று கேக் வெட்டி விமரிசையாக கொண்டாடினோம்.
என் பெற்றோர் தான் எனக்கு உத்வேகம், பலம், ஊக்கம் அளிக்கின்றனர். முதலில் அவர்களுக்கு பரிசு வழங்குவது தான் சரியாக இருக்கும். அவர்களுக்கு இன்னும் பல பரிசுகள் வாங்கி கொடுக்க ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனந்த கண்ணீர் வடித்த தந்தை
- நமது நிருபர் -.
மேலும்
-
யுகாதி பண்டிகை கொண்டாட்டம்
-
விளாச்சேரிக்கு வி.ஏ.ஓ., வேண்டும்
-
துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம்
-
சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்; தவறினால் அபராதம்
-
சைதை, கோட்டூர்புரத்தில் ரூ.395 கோடியில் 2,322 வீடுகள் பங்களிப்பை செலுத்த வாரியம் வலியுறுத்தல்