மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது

மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. சில மாதங்களாக இவருக்கு மாதவிலக்கு வரவில்லை. இதை கவனித்த சிறுமியின் தாயார், மகளிடம் விசாரித்தார். அவரோ, தெரியாது என்று கூறியுள்ளார்.

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் கேட்டனர்.

அப்போது, தாயின் தங்கை கணவரான சித்தப்பா நஞ்சுண்டசாமி, பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி, மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்; இதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர், நஞ்சன்கூடு டவுன் போலீசில் புகார் அளித்தனர். 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், நஞ்சுண்டசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கிடையில், மாணவியை தங்கள் பாதுகாப்பு மையத்தில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருவதால், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று தேர்வு மையத்துக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement