சமாதான பேச்சில் பெண்ணைதாக்கியவர் சிறையிலடைப்
சமாதான பேச்சில் பெண்ணைதாக்கியவர் சிறையிலடைப்பு
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30; இவரது மனைவி மோனிஷா, 25; இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்தது. இது தொடர்பாக மோனிஷா வீட்டில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மணிகண்டனுடன் வந்த கோகுல், 20, தாக்கியதில், மோனிஷாவின் தாயார் லட்சுமி அம்மாள், 55, காயமடைந்தார். இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குப்பை கிடங்கில் தீ விபத்துஈரோடு:அரச்சலுார் அருகே அனுமன்பள்ளி பஞ்.,க்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இக்குப்பை கிடங்கில் மக்காத குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். குப்பை நடுவே நேற்று கரும்புகை வந்தது. சில நிமிடங்களில் தீப்பிடித்து எரியத்துவங்கியது. சென்னிமலை தீயணைப்பு துறையினர், 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
மாற்று வழியில் கோவை பஸ்களைஇயக்க பா.ஜ., நிர்வாகி கோரிக்கைதாராபுரம்:தாராபுரத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், அவிநாசி சாலை வழியாக கோவையை அடைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரத்தில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், சூலுாருக்கு பின் திருச்சி சாலை வழியாக காந்திபுரத்தை அடைகின்றன. இதற்கு மாற்றாக சூலுாரில் இருந்து, அவிநாசி சாலை வழியாக காந்திபுரம் சென்றால், அவ்வழியில் உள்ள பல மருத்துவமனை மற்றும் கல்லுாரிகளுக்கு செல்ல முடியும். மக்கள் நலன் கருதி, புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்