புகார் பெட்டி சேதமான மின் கம்பத்தால் புத்தேரியில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்து உள்ளது. பலத்த காற்று வீசினாலோ, இவ்வழியாக செல்லும் கனரக வாகனம் லேசாக உரசினாலோ, மின் கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என். ஜெயராமன்,
காஞ்சிபுரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து
-
மூதாட்டி கொலை வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
-
பிளாட் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கைது
-
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டம்
-
நத்ஹர்வலி தர்காவுக்கு பட்டுப்போர்வை திருச்சி சாரதாஸ் நிறுவனம் வழங்கல்
-
சிங்கப்பூர் தமிழ் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement