மருத்துவ கருத்தரங்கம்

காஞ்சிபுரம்,
இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம், சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்று நடந்தது.

சங்கர செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். சிறு நீரகவியல் பேராசிரியர் டாக்டர் மேத்யு ஜெரி ஜார்ஜ் சிறுநீரக கோளாறின் அறிகுறிகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும், டயாலிசிஸ் சிகிச்சை குறித்தும் கருத்தரங்க உரையாற்றினார்.

இதில், புரவலர் டாக்டர் ஜீவானந்தம், பொருளாளர் டாக்டர் ஞானவேல்,, முன்னாள் தலைவர்கள் டாக்டர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement