காஞ்சிபுரத்தில் வரும் 25ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் கூட்டம், காஞ்சிபுரம் தலைமை தபால் நிலைய கட்டடத்தில், வரும் 25ம் தேதி, மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில், தபால் சம்பந்தப்பட்ட புகார்களை அளிக்கலாம். தபால் தொடர்பான புகார் எனில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பண விடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விபரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் எனில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விபரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால், புகாருடன் இணைக்க வேண்டும்.

குறைகளை 24ம் தேதிக்குள், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், கண்காணிப்பாளர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement