தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்

தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், பி.டி.ஓ., அலுவலக அரங்கில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., அண்ணாதுரை வரவேற்றார். கூட்டத்தில் 14 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இதில், ஒன்றியத்தில் உள்ள, 40 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்; புதிய திட்டப் பணிகளை செயல்படுத்துதல்; கோடைகாலம் துவங்குவதால் குடிநீர் பிரச்சனை வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்; உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஒன்றிய பொறியாளர்கள் ஷபான்கான், பழனிவேல், ராமர், துணை பி.டி.ஓ.,க்கள் சுதாகர், முத்தமிழ்செல்வன், பணிமேற்பார்வையாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement