தொழுநோயாளிகளுக்கு ஊன தடுப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோயாளிகளுக்கு சிறப்பு ஊனத்தடுப்பு சிகிச்சை முகாம் நடந்தது.

மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி தொழு நோயாளிகளை பரிசோதனை செய்து, காலணிகள், கண் கண்ணாடி, காயத்திற்கான சிறப்பு சிகிச்சை பெட்டகம், மருந்து, மாத்திரைகள், நடப்பதற்கான ஊன்றுகோல் மற்றும் போர்வைகளை வழங்கினார். டாக்டர் ராமகிருஷ்ணன், நோயாளிகளுக்கு தொழுநோய் குறித்தும், உடலை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், வசந்தன், பாலா, கவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement