போலீசார் பறிமுதல் செய்த 78 வாகனங்கள் 28 ல் ஏலம்

சென்னை, சென்னையில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 78 வாகனங்கள், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவை, வரும் 28ம் தேதி காலை, 10:00 மணியவில் ஏலம் வாயிலாக விறகப்பட உள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி.,பதிவு எண் சான்றுடன் வந்து, 1,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலத்தில் விற்கப்படும் வாகனங்களுக்கான தொகையை ஜி.எஸ்.டி., கட்டணத்தை மறுநாள் முழுதும் செலுத்த வேண்டும். அதன்பின் விற்பனை ஆணை வழங்கப்படும் என, காவல் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement