ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

சிதம்பரம்; சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.

சிதம்பரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. இப்பணிகளை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங், நேற்று காலை ரயில் ஆய்வு செய்தார். ரயில் நிலைய நடைமேடை பகுதிகள், உள் வளாகப் பகுதிகள், வெளிவளாகப் பகுதிகள் அனைத்து பகுதி பணிகளையும் ஆய்வு செய்து, விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்க்பபட்டது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ,ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் உடனிருந்தனர்.

Advertisement