வேளாண் கல்லுாரி மாணவியருக்கு தோட்டக்கலை பண்ணையில் பயிற்சி

விச்சந்தாங்கல்,
தக்கோலம் சகாய தோட்டம், வேளாண் கல்லுாரியில், பி.எஸ்சி., வேளாண்மை இறுதியாண்டு பயிலும், மாணவியர் பண்ணை சுற்றுலா திட்டத்தின் வாயிலாக, விச்சந்தாங்கல் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு நேற்று வந்தனர்.

இப்பண்ணையில், தோட்டக்கலை அலுவலர் சே.சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மு.தனஞ்ஜெயன் ஆகியோர், நவீன தொழில்நுட்பத்தில் எவ்வாறு செடிகள் வளர்ப்பது குறித்து விளக்கினர்.

மேலும், பதியன் போடுதல், மண்புழு உரம், மண் கலவை தயாரித்தல், களை எடுத்தல், மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தும் முறை உள்ளிட்ட தோட்டக்கலை சார்ந்த பணிகளை செயல்விளக்க முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

Advertisement