ரூ.1.40 லட்சத்திற்குதேங்காய் பருப்பு ஏலம்


ரூ.1.40 லட்சத்திற்குதேங்காய் பருப்பு ஏலம்


மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்தில், காளிப்பட்டி, மங்களம், பள்ளக்குழி, கரட்டுவலவு, செண்பகமாதேவி, மேல்முகம், சூரியகவுண்டம்பாளையம், ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடை கொண்ட, 40 மூட்டை தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 130.80 ரூபாய் முதல், 166.90 ரூபாய்; இரண்டாம் தரம், 108.10 ரூபாய் முதல், 120.80 ரூபாய் என, மொத்தம், 1.40 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வரும், 28ல் நடக்கிறது.

Advertisement