மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில்மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில்மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
நாமக்கல்:கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. நகர தெற்கு செயலாளர் ராணா ஆனந்த் தலைமை வகித்தார்.
இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர்கள் ராஜிவ்காந்தி, இளம் பேச்சாளர் வியானி விஷ்வா ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசுகையில், ''மக்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்தில், தற்போதுள்ள, 39 தொகுதிகள், 31வாக குறைக்கப்படும். அதனால், தமிழக முதல்வர், இந்தியாவுக்கு அரை கூவலாக, நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கும் மாநிலங்களை ஒன்றிணைக்கிறார்.
தொகுதி வரைமுறையால், தமிழகம் எந்த அளவிற்கு பாதிக்கும், எதிர்காலத்தில் நாம் எந்த அளவிற்கு நம்முடைய உரிமைகளை இழப்போம், எந்த அளவுக்கு நம்முடைய வாய்ப்புகள் பறிபோகும் என்பதை உணர்த்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்,'' என்றார்.
மேலும்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்