பெ.ஆ., கோவிலில் கழிப்பிடத்தைதிறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெ.ஆ., கோவிலில் கழிப்பிடத்தைதிறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட, பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவிலில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளை, திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், பெரிய ஆண்டாங்கோவிலில் புதிய பொது கழிப்பிடம் கட்டி தரக்கோரி, அப்பகுதி மக்கள், கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துாய்மை பாரத இயக்கம்-2 திட்டத்தின் கீழ், ஏழு லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் செலவில், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை அருகே, புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள், திறந்த வெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்,' பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டும், திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள், அமராவதி ஆற்றுப்
பகுதிக்கு செல்லும் பகுதியை, திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடம் இல்லாமல் பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். பெண்கள் வசதிக்காக, புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறந்து விட, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்