கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

ஜான்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது;

புதுச்சேரியில் 6 ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை செய்யாததால், அதன் எண்ணிக்கை அதிகரித்து தொல்லை அதிகமாகிவிட்டது.

நாய்களால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. புளு கிராஸ் அமைப்புகள் நாய்களை உயிருடன் பாதுகாக்க 10 ஏக்கர் நிலம் கேட்கின்றனர். அங்கு காப்பகம் அமைத்து நாய்களை பாதுகாக்கலாம்.

ஹெல்மெட் அணியாததால் பலர் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். அதனால் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நகர பகுதியில் ஹெல்மெட் தேவையில்லை என, கூறுவது தவறு.

பிருந்தாவனம் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் சாலையில் வீடு கட்டி வைத்திருப்பதால், பொதுமக்கள் செல்ல வழியில்லை.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தும் மருத்துவமனை வாசலில் பெயர் பலகை வைக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தாத மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

அதுபோல் ஏரி, குளங்களை முறையாக துார்வாரி நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என, பேசினார்.

Advertisement